கையை துளைத்த துப்பாக்கி குண்டு; உயிர் தப்பிய கட்டிடத்தொழிலாளி: சிக்கிய நிலபுரோக்கர்

கையை துளைத்த துப்பாக்கி குண்டு; உயிர் தப்பிய கட்டிடத்தொழிலாளி: சிக்கிய நிலபுரோக்கர்

சென்னையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து கட்டிடத் தொழிலாளி படுகாயம் அடைந்தார். துப்பாக்கியால் சுட்டி நிலபுரோக்கரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வடமாநிலத்தை சேர்ந்தவர் சென்டஸ்க்(31). இவர் சென்னை மாதவரம் பால்பண்ணை, பெரிய சேக்காடு பகுதியில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை சென்டஸ்க் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென அவரது வலது கையில் இருந்து ரத்தம் வருவதை கண்ட சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது வலது கையில் துப்பாக்கி குண்டு இருப்பது தெரியவந்தது. உடனே மருத்துவர்கள் அதனை அகற்றி முதலுதவி செய்து பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கைது செய்யப்பட்ட லாரன்ஸ்
கைது செய்யப்பட்ட லாரன்ஸ்

பின்னர் இச்சம்பவம் குறித்து சக ஊழியர்கள் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் பால்பண்ணை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியில் 60 அடி தூரத்தில் உள்ள கட்டிடத்தின் மாடியில் இருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. பின்னர் போலீஸார் துப்பாக்கியால் சுட்ட நபரை பிடித்து வந்து விசாரணை நடத்தியதில் லாரன்ஸ் (32) என்பதும் புரோக்கர் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் லாரன்ஸ் ஏர்கன் துப்பாக்கியால் பறவைகளை சுடும்போது குறிதவறி சென்டஸ்க் கையில் பட்டதும் தெரியவந்தது. பின்னர் போலீஸார் துப்பாக்கியை பறிமுதல் செய்து லாரன்ஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in