குடும்ப பிரச்சினையால் பிரிந்த மனைவி: ஆத்திரத்தில் மாமனாரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மருமகன்

குடும்ப பிரச்சினையால் பிரிந்த மனைவி: ஆத்திரத்தில் மாமனாரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மருமகன்

திருநெல்வேலியில் குடும்பத் தகராறின் காரணமாக இன்று காலையில் கட்டுமானத் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம், கீழபாப்பாக்குடி புதுகிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா என்ற துரை(53). கட்டுமான தொழிலாளியான இவர் இன்று காலையில் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டுத் தன் பைக்கில் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். லெட்சுமிபுரம் விளக்குப் பகுதியில் வந்தபோது, அவரது மோட்டார் சைக்கிளை, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிமறித்தனர். இதனால் அவர் ஓடவும், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுப்பையா என்கிற துரையை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

பாப்பாக்குடி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது இந்த கொலை சம்பவத்தின் பின்னணி தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட துரையின் மகன் மாரிமுத்துவுக்கும், அதேபகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகள் உமா மகேஸ்வரிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக மாரிமுத்துவும், உமா மகேஸ்வரியும் பிரிந்துவிட்டனர். இதனால் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையின் காரணமாகவே சுப்பையா கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்தக் கொலை சம்பவத்தை மாரியப்பனும், அவரது மகனும் செய்தது தெரியவந்தது. தலைமறைவாக இருக்கும் அவர்கள் இருவரையும் போலீஸார் தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in