காவலர் குடியிருப்பிலேயே கொள்ளையடித்த சப்-இன்ஸ்பெக்டரின் மகன், நண்பர் கைது!

பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்
பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்காவலர் குடியிருப்பிலேயே கொள்ளையடித்த சப்-இன்ஸ்பெக்டரின் மகன், நண்பர் கைது!

சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் அடுத்தடுத்து 5 வீடுகளில் 25 சவரன் நகை, 35 ஆயிரம் பணம், செல்போன் திருடப்பட்ட சம்பவத்தில் காவல் உதவி ஆய்வாளர் மகன் உட்பட இருவரை போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்து நகை, பணம், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே புதுப்பேட்டை காவலர் குடியிருப்பு உள்ளது. எட்டு தளங்களைக் கொண்ட இக்குடியிருப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர் குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த 21-ம் தேதி இரவு எம் 6 பிளாக்கில் புகுந்த நபர் ஒருவர், அடுத்தடுத்து 5 வீடுகளின் பூட்டைத் திறந்து 25 சவரன் நகை, 35 ஆயிரம் பணம், 2 செல்போன்களைத் திருடிச் சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளர்கள், உடனடியாக எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தியதில், உதவி ஆய்வாளரின் மகன் நண்டு (எ) நந்தகோபால் மற்றும் அருண் (19) என்பவருடன் இணைந்து இந்த திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட நந்தகோபால் மற்றும் அருண்
கைது செய்யப்பட்ட நந்தகோபால் மற்றும் அருண்காவலர் குடியிருப்பில் அடுத்தடுத்து கொள்ளை; எஸ்.ஐ. மகன் உட்பட இருவர் கைது!

மேலும் பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கும் காரணத்தால், பெரும்பாலான குடியிருப்புகளின் கதவுகளை பூட்டாமல் சாத்தி மட்டுமே வைப்பதை மட்டுமே வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதை பயன்படுத்தி நந்தகோபால் மற்றும் அருண் ஆகிய இருவரும் 5 வீடுகளில் நுழைந்து 25 பவுன் தங்க நகைகள், 35 ஆயிரம் ரூபாய் மற்றும் மூன்று செல்போன்கள் கொள்ளை அடித்ததும் தெரியவந்தது. கல்லூரி படிக்கும் நந்தகோபால் போதை பழக்கத்திற்கு அடிமையாகி செலவுக்கு பணம் இல்லாததால் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நந்தகோபால் மற்றும் அவரது நண்பன் அருண் ஆகிய இருவரையும் சென்னை எழும்பூர் காவல்நிலையக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து கொள்ளைப் போன 25 பவுன் தங்க நகைகளை மீட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in