கஞ்சா விற்கும் கும்பலுடன் கனெக்சன்: காவல்துறையினர் 3 பேர் அதிரடியாக சஸ்பெண்ட்

கஞ்சா விற்கும் கும்பலுடன் கனெக்சன்: காவல்துறையினர் 3 பேர் அதிரடியாக சஸ்பெண்ட்

கஞ்சா விற்பவர்களுடன் தொடர்பில் இருந்த 3 போலீஸ்காரர்களை பணியிடை நீக்கம் செய்து ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபா சத்யன் உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை கொடி கட்டிப்பறக்கிறது. இங்கு கஞ்சா விற்பவர்களுடன் போலீஸ்காரர்கள் கூட்டணி அமைத்துள்ளனர். இதுகுறித்து விசாரிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபா சத்யன் உத்தரவிட்டார்.

இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்த நபர்களுடன் தொடர்பில் இருந்த அரக்கோணம் போலீஸ் கண்ணன், சோளிங்கர் தலைமைக்காவலர் வேணுகோபால், அரக்கோணம் தாலுகா காவலர் ரமேஷ் ஆகிய மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபாசத்யன் அதிரடி உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டையில் 3 போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in