‘இலங்கை மக்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்!’ - சோனியா காந்தி உறுதி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

பொருளாதார ரீதியாக நலிவுற்று இருக்கும் இலங்கை மக்களுக்கு காங்கிரஸ் கட்சி எப்போதுமே துணை நிற்கும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சோனியா காந்தி விடுத்துள்ள அறிக்கையில், “இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான சூழலில் காங்கிரஸ் கட்சி அம்மக்களுக்கு உறுதியாகத் துணைநிற்கிறது. விலைவாசி உயர்வு, பொருளாதார சவால்கள், விலைவாசி உயர்வு, உணவு, எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் பற்றாக்குறையால் இலங்கை மக்களிடம் பெரிய அளவில் பாதிப்பும், மன அழுத்தமும் ஏற்பட்டுள்ளன.

இந்த நெருக்கடியிலிருந்து இலங்கை மக்கள் மீண்டுவருவார்கள் என்று நம்புகிறேன். இலங்கை அரசுக்கும், மக்களுக்கும் இந்தியா தொடர்ந்து உதவும் என்று நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். மேலும், சர்வதேச சமூகமும் இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவையும் வழங்கவேண்டும் எனக் காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in