மீண்டு வந்த ராகுல்காந்தி... வயநாடு தொகுதிக்குச் செல்கிறார்!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மக்களவை எம்.பி.யாக மீண்டும் நியமிக்கப்பட்ட ராகுல் காந்தி ஆகஸ்ட் 12-ம் தேதி தனது வயநாடு தொகுதியை பார்வையிட செல்கிறார்.

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அவருக்கு மீண்டும் மக்களவை எம்.பி பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், அவர் கேரளாவில் உள்ள தனது சொந்த தொகுதியான வயநாடு தொகுதிக்கு இரண்டு நாள் பயணமாக 12 மற்றும் 13-ம் தேதி செல்கிறார்.

அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ராகுல், மக்களைச் சந்தித்து உரையாடுகிறார். இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘‘ஜனநாயகம் வென்றுள்ளது என வயநாடு தொகுதி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அவர்களின் குரல் நாடாளுமன்றத்தில் மீண்டும் ஒலிக்கவுள்ளது. ராகுல் எம்.பி. மட்டும் அல்ல. வயநாடு மக்களின் குடும்ப உறுப்பினர்’’ என குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் அதே வீடு: இதனிடையே, மக்களவை எம்.பி பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்யப்பட்டதால், டெல்லி துக்ளக் சாலையில் வழங்கப்பட்டிருந்த 12-ம் எண் அரசு வீட்டை ராகுல் காந்தி கடந்த ஏப்ரல் மாதம் காலி செய்து, தாய் சோனியா வீட்டில் குடியேறினார். தற்போது அவர் மீண்டும் எம்.பி.யாகியுள்ளதையடுத்து, அவருக்கு மீண்டும் அதே வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in