கர்நாடகாவில் பரபரப்பு... காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்வதாக திடீர் போர்க்கொடி!

காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சி

கர்நாடக காங்கிரசுக்கு தேர்தல் நேரத்தில் பலத்த அடியாக, 5 எம்எல்ஏ-க்கள், 2 எம்எல்சி-க்கள், தங்கள் ஆதரவாளர்களுக்கு சீட் கோரி ராஜினாமா செய்வதாக கட்சியை மேலிடத்தை அச்சுறுத்தி வருகின்றனர்.

அமைச்சர் கே.எச்.முனியப்பா
அமைச்சர் கே.எச்.முனியப்பா

கர்நாடகாவில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் கே.எச்.முனியப்பாவின் உறவினருக்கு கோலார் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த 5 எம்எல்ஏ-க்கள், 2 எம்எல்சி-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

அதிருப்தி எம்எல்ஏ-க்களில் ஒருவரான கர்நாடக உயர்கல்வித் துறை அமைச்சர் டாக்டர் எம்.சி. சுதாகர், மற்ற எம்எல்ஏ-க்கள் ஒரு குடும்பத்துக்கு (கே.எச்.முனியப்பா) அடிமையாக இருக்க முடியாது என கூறி வருவதாக தெரிவித்தார். மேலும், கே.எச்.முனியப்பாவின் குடும்பத்துக்கு தேர்தல் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் எம்எல்ஏ-க்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அமைச்சர் சுதாகர் மேலும் கூறுகையில், “கட்சியில் உள்ள மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இன்று பிற்பகல் முதலமைச்சர் சித்தராமையாவுடன் பேசுவோம். அவரது (முனியப்பா) செயல்பாடுகளால் நாங்கள் பாதிக்கப்பட்டோம். சிரமங்களை எதிர்கொண்டோம்.

பட்டியல் சாதி சமூகத்தினர் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை என்ற பொதுவான குறை தொகுதியில் எதிரொலிக்கிறது. அந்தக் குடும்பத்துக்கு வெளியே நாங்கள் வேட்பாளரை எதிர்பார்க்கிறோம்" என்றார்.

இந்நிலையில் அதிருப்தி எம்எல்ஏ-க்கள், சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து ராஜினாமா செய்வதாக, கட்சியின் மேல்மட்டத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கட்சி மேலிடம் தங்கள் கருத்துகளைக் கேட்டதாகவும், ஆனால் தங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த 8ம் தேதி வெளியிடப்பட்டது. 17 பேர் அடங்கிய 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த 21ம் தேதி வெளியானது. இதில் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் மற்றும் ஐந்து அமைச்சர்களின் வாரிசுகளுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சி

கோலார் தொகுதியில் தனது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு வழங்க வேண்டும் என கே.எச்.முனியப்பா ஏற்கெனவே கூறியிருந்தார். ஆனால், அந்த தொகுதியை சேர்ந்த ஒரு பிரிவு தலைவர்கள், முன்னாள் எம்பி-எல்.ஹனுமந்தையாவுக்கு சீட் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

கர்நாடகாவில் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in