பிரியங்கா காந்தியை தொடர்ந்து சோனியா காந்திக்கும் மீண்டும் கரோனா பாதிப்பு

சோனியா காந்தி
சோனியா காந்தி

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசாங்க நெறிமுறையின்படி அவர் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 10 அன்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும், சோனியா காந்தியின் மகளுமான பிரியங்கா காந்திக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. ராகுல் காந்திக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் தனது ராஜஸ்தான் பயணத்தை ரத்து செய்துவிட்டு ஓய்வில் உள்ளார்.

ஏற்கெனவே கடந்த ஜூன் மாதம் சோனியா காந்தி கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் மீண்டும் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,815 பேர் புதிதாக கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in