
ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களை விடுவிக்கக் வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது. மேலும், தெலுங்கு தேசம் கட்சியை தங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கின்றார். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் நடைபெறவுள்ள மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப் போவதாக பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணியில் சேருமாறு தெலுங்கு தேசம் கட்சிக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. மேலும் சந்திரபாபு நாயுடு அவர்களை சிறையில் இருந்து விடுவிக்கவும் அக்கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் சிந்தா மோகன், "ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மிகவும் நல்ல மனிதர் ஆவார். சகிப்புத் தன்மைக்கு அப்பால் இருக்கும் முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடு அவர்களை அடிக்கடி தொந்தரவு செய்யும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் செயல் அநியாயம் ஆகும்.
சந்திரபாபு நாயுடு உடனடியாக சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டும். நீதிமன்றங்களில் அரசியல் கட்சிகளின் தலையீடு மிகவும் அதிகமாகவே இருக்கின்றது” என தெரிவித்துள்ளார்
மேலும், “முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணியில் இணைய வேண்டும். தற்சமயம் ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 10 முதல் 15 சதவீதம் வரை வாக்கு வங்கி அதிகரித்து இருக்கின்றது" என்று கூறினார்.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!
சோகம்... படகு கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு... 167 பேர் மாயம்!
அதிர்ச்சி... குளிக்க வைத்திருந்த வெந்நீர் கொட்டி 4 வயது குழந்தை மரணம்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பயணம்... போரின் உக்கிரம் குறையுமா?
என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்...மருமகள் கொடுமையால் கலெக்டரிடம் மூதாட்டி கதறல்!