கஞ்சா விற்பதில் கோஷ்டி மோதல்;ரவுடி வெட்டிப்படுகொலை: மற்றொருவர் கவலைக்கிடம்

கஞ்சா விற்பதில் கோஷ்டி மோதல்;ரவுடி வெட்டிப்படுகொலை: மற்றொருவர் கவலைக்கிடம்

பள்ளிக்கரணை அருகே கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மற்றவர் கவலைக்கிடமான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் குறுக்குத் தெருவில் சிலர் ஆயுதங்களுடன் மோதிக் கொள்வதாக காவல் நிலையத்துக்கு நேற்று இரவு தகவல் வந்தது. இதையடுத்து பள்ளிக்கரணை போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள புதரில் மேடவாக்கம், புஷ்பா நகரை சேர்ந்த ரவுடி பிரைட் என்ற ஆல்வின்(28) தலை, கழுத்து,கை,கால், வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். மேலும் அவருடன் பெருமாள் (23) என்பவரும் கை,கால் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மயங்கி கிடந்துள்ளார். உடனே போலீஸார் பெருமாளை குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ரவுடி ஆல்வின் உடலைப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ரவுடி ஆல்வின் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும் ரவுடி ஆல்வினுக்கும், சூரை மணி என்பவருக்கும் கஞ்சா விற்பனை செய்வதில் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக சூரை மணி ஆல்வினை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர். மேலும் ஆல்வின் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in