பேனரை அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்; சுகாதார ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: கைதான கடை ஊழியர்

கைது செய்யப்பட்ட அருண் கார்த்திக்
கைது செய்யப்பட்ட அருண் கார்த்திக்பேனரை அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்; சுகாதார ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: கைதான கடை ஊழியர்

கடையில் வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றச் சென்ற மாநகராட்சி சுகாதார ஆய்வாளருடன் மோதலில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்குத் தாம்பரம் பகுதிகளில் கடந்த 25-ம் தேதி முதல் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு ஊழியர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று அந்தப்பகுதியில் உள்ள மீன் கடை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பேனரை ஊழியர்கள் அகற்ற முயன்றனர்.

இதற்கு அந்தக் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. ஒரு கட்டத்தில் அருண் கார்த்திக் என்ற ஊழியர், மாநகராட்சி ஊழியர்களைத் தாக்கியுள்ளார்.

இதைக் கேள்விப்பட்டுச் சுகாதார ஆய்வாளர் சாமுவேல் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார், அப்போது அந்த நபர் சுகாதார ஆய்வாளரையும் தகாத வார்த்தைகளால் பேசி, அடிக்கப் பாய்ந்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனையடுத்துப் பாதிக்கப்பட்ட அதிகாரி, சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதிகாரியின் புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், அருண் கார்த்தியைத் தேடி வந்த நிலையில், அவர் தாம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தலைமறைவாக இருப்பதைக் கண்டுப்பிடித்து இன்று கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in