பூமிக்கடியில் மறைத்து வைக்கப்பட்ட உலோக சிலைகள்: சிலை கடத்தல் பிரிவினர் அதிரடி!

பூமிக்கடியில் மறைத்து வைக்கப்பட்ட உலோக சிலைகள்: சிலை கடத்தல் பிரிவினர் அதிரடி!

வெளிநாட்டிற்கு கடத்தப்பட இருந்த உலோகச் சிலைகளை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் மீட்டெடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகில் உள்ள பொம்மையபாளையம் என்ற பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் உலோக சிலைகள் விற்பனை செய்து வருகிறார். இவரது கடையில் உலோக சிலைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சிலை கடத்தல் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் அங்கு சிலைகள் ஏதும் இல்லாததால், சிலைக்கடத்தல் பிரிவினர் தொடர்ந்து ராமச்சந்திரனிடம் நடத்திய விசாரணையில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.

இதையடுத்து கடைக்கு அருகிலுள்ள பூந்தோட்டத்தில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, பூமிக்கு அடியில் அர்த்தநாரீஸ்வரர், கிருஷ்ணர், புத்தர், மயில் சிலைகள் உள்ளிட்ட 7 உலோக சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து பறிமுதல்  செய்யப்பட்ட சிலைகள் பல கோடி ரூபாய் மதிப்பு இருக்கலாம் எனக் சிலைகத்தல் தடுப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆரோவில் பகுதியில் அமைந்துள்ள ஆரோ ரச்சனா கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் கடையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர், 20 பழங்கால சிலைகளை பிரான்ஸ் நாட்டுக்கு கடத்துவதற்காக திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிலைகள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in