கட்டுக்கட்டாக பணம், தங்கம், வெள்ளி... ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் நடந்த ரெய்டில் அதிர்ச்சி!

பிடிபட்ட பணம்.
பிடிபட்ட பணம்.

ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை ஊழியர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.10 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் அஷ்பக் அலி ஸ்டோர் கீப்பர் என்பவர் சுகாதாரத் துறை பதவியில் இருந்து ஓய்வு பெற்று மாதம் ரூ.45,000 ஓய்வூதியம் பெற்று வருகிறார். இந்தநிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அஷ்பக் அலி மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அஷ்பக் அலி லோக் ஆயுக்தா அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது, வீட்டில் இருந்து ரூ.46 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி, ரூ.20 லட்சம் ரொக்கம் ஆகியவை சிக்கியது.

மேலும், அவரது மனைவி, மகன் மற்றும் மகள் பெயரில் உள்ள 1.25 கோடி ரூபாய் மதிப்புள்ள 16 அசையா சொத்துகள் தொடர்பான ஆவணங்களும் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அஷ்பக் அலி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in