நடத்தியது கஞ்சா சோதனை; சிக்கியது 1.75 கோடி பணம்: விரைவு ரயிலில் வந்த ஆந்திர வாலிபர்கள் சிக்கினர்!

நடத்தியது கஞ்சா சோதனை; சிக்கியது 1.75 கோடி பணம்: விரைவு ரயிலில் வந்த ஆந்திர வாலிபர்கள் சிக்கினர்!

கஞ்சா சோதனையின் போது ரயிலில் சிக்கிய கணக்கில் வராத 1.75 கோடி பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் சிக்கிய 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அண்ணாநகர் மதுவிலக்கு பிரிவு போலீஸார் இன்று காலை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கஞ்சா சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கச்சிக்கோடா விரைவு ரயிலில் இருந்து இறங்கிய இரு நபர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்ததால் அவர்களது கையில் வைத்திருந்த இரு பைகளை போலீஸார் சோதனை செய்தனர். அதில் 1.75 கோடி பணம் இருந்தது. மேலும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்ததை பறிமுதல் செய்து இருவரையும் செம்பியம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து அவர்களிடம் செம்பியம் போலீஸார் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அபிஷேக்(22), சூரஜ்(22) என்பதும் இவர்கள் ஆந்திர மாநிலத்தில் நகை வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் சௌகார்ப்பேட்டையில் நகை வாங்குவதற்காக 1.75 கோடி ரூபாயை கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் பணத்திற்குண்டான உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீஸார் பணத்தை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in