குற்றவாளிகள் கிடைக்காததால் இருளர் இளைஞர்கள் துன்புறுத்தல்: `ஜெய்பீம்’ படப்பாணியில் போலீஸ் கொடுமை!

மாவட்ட ஆட்சியருக்கு புகார் கடிதம்
ஜெய்பீம் படத்தில் சூர்யா
ஜெய்பீம் படத்தில் சூர்யாகுற்றவாளிகள் கிடைக்காததால் இருளர் இளைஞர்கள் துன்புறுத்தல்: `ஜெய்பீம்’ படப்பாணியில் போலீஸ் கொடுமை!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ’ஜெய்பீம்’ படப்பாணியில் குற்றவாளிகள் கிடைக்காததால் இருளர் இளைஞர்களை குற்றவாளிகளாக ஆக்கி துன்புறுத்துவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 16-ம் தேதி திருப்போரூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஈ.சி.ஆர்.சாலையில் அமைந்துள்ள நெம்மேலி கிராமத்தில் உள்ள முந்திரி தோப்பு பண்ணை வீட்டில் தனியாக இருந்த முதிர் வயது தம்பதிகளான சகாதேவன்(92), ஜானகியம்மாள்(82) ஆகியோர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு அவர்களிடமிருந்த 5 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மாமல்லபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வழக்கில் நெம்மேலி கிராமத்திற்கு அருகிலுள்ள  கன்னிமாநகர் இருளர் பகுதியை சார்ந்த வினோத், முத்து, ஏகாம்பரம் மற்றும் பிரசாந்த் ஆகிய நான்கு இளைஞர்களை மாமல்லபுரம் காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்தனர்.

விசாரணை  என்கிற பெயரில் அவர்களை கடுமையாக தாக்கியதாக கடந்த மாதம் 26-ம் தேதி  செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் இருளர் மக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்த நான்கு நபரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் மாமல்லபுரம் காவல்துறையினர் இந்த நான்கு இளைஞர்களையும் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையம் அழைத்து செல்வதாக கூறி தனியார் இடத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் மிகவும் கடுமையாக தாக்கி, கொலை குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார்’ஜெய்பீம்’ படப்பாணியில் குற்றவாளிகள் கிடைக்காததால் இருளர் இளைஞர்களை துன்புறுத்துவதாக புகார்..!

மூன்று நாட்களுக்கு முன்பு விசாரணை என்று அழைத்துச் செல்லப்பட்ட நான்கு இளைஞர்களில் மூவரை வீட்டிற்கு அனுப்பி விட்டு, செல்வராஜ் என்பவரது மகன் முத்து என்பவரை இதுவரை எங்கே வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை.

காவல்துறையினர் தாங்கள் இருளர் மக்கள் என்பதால் தங்களுக்கு யாரும் இல்லையென்பதால் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு காவல்துறையினர் மிரட்டுவதாகவும், காவல்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள முத்துவை உடனடியாக மீட்டு தர வேண்மென  பாதிக்கப்பட்ட இருளர் இன பெண்கள் கண்ணீர் மல்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் புகார் மனு அளித்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in