சுங்கச்சாவடி அறிவிப்பு பலகை விழுந்து பலியான பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுரை உயர் நீதிமன்றம்
மதுரை உயர் நீதிமன்றம்

2018-ல் டோல்கேட் அறிவிப்பு பலகை விழுந்து பலியான பெண் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டை 6 சதவீத வட்டியுடன் வழங்கவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி - திண்டுக்கல் சாலையில் பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி உள்ளது. இங்கு கடந்த 2108-ல் அறிவிப்பு பலகை விழுந்து பெண் பலியானார். இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாமல் அறிவிப்பு பலகை விழுந்தாக தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினர். இது கடவுள் செயல் என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இது கடவுள் செயல் என்பதை ஏற்க முடியாது. பலியான அப்பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகையை விபத்து நடந்த நாள் முதல் இன்று வரை 6 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in