
வணிக பயன்பாட்டுக்கான சமையல் சிலிண்டர் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
வணிக பயன்பாட்டுக்கான 19 கிகி எடையுள்ள சமையல் சிலிண்டர் விலை 203 ரூபாய் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 1,695 ரூபாய்க்கு விற்பனையான வணிக சிலிண்டர் விலை இதனால் 1,898 ரூபாய்க்கு இனி கிடைக்கும்.
சமையல் தேவைக்கான கேஸ் சிலிண்டர்களின் விலையை அவற்றை தயாரிக்கும் எண்ணெய் நிறுவனங்கள் தேவைக்கேற்ப மாறுதல்களை அறிவித்து வருகின்றன. இதன்படி அக்.1 முதல் வணிக சிலிண்டரின் விலை உயர்வு கண்டுள்ளதாக அறிவித்துள்ளது உணவக உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டரில் விலையில் எந்த மாற்றமும் இன்றி, அதே 918 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதிலும் சாமானியர்களுக்கான சிறிய உணவகங்களை இந்த விலை உயர்வு பாதிக்கும் என்பதால், அவை அந்த உணவகங்களின் உணவு தயாரிப்பு விலையில் எதிரொலிக்க வாய்ப்பாகும். சுற்றி வளைத்து அவை சாமானியர்களின் செலவினத்தையே பதம் பார்க்கும்.
இதையும் வாசிக்கலாமே...
புரட்டாசி சனிக்கிழமை: பெருமாளையும், தாயாரையும் இப்படி தரிசித்து வந்தால் தரித்திரம் விலகும்!
சீமான் இலங்கை தமிழர்களை ஏமாற்றியதற்கு இதோ ஆதாரம்’ வீரலட்சுமி ஆவேசம்!
மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பள்ளி முதல்வர் கைது!
சொகுசு காரில் வந்து கீரை விற்கும் விவசாயி... வைரலாகும் வீடியோ!
பிக் பாஸ்7: போச்சு... இவர்தான் கேப்டனா...? முதல் நாளே பஞ்சாயத்து கூட்டிய பிக் பாஸ்!