
கூட்டுக்கொள்ளை வழக்கில் கைதான பெண் உள்பட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாலையூர் 4 ரோட்டில் ஒரு வீட்டில் கடந்த 2022 டிச.25ஆம் தேதி கொள்ளை நடந்தது. இக்கொள்ளையில் ஈடுபட்ட 15 பேரை வேடசந்தூர் போலீஸார் கைது செய்து கோர்ட் உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
இக்கூட்டுக்கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஜோதி (36), பெரம்பலூரைச் சேர்ந்த செல்வக்குமார் (48), தஞ்சாவூரைச் சேர்ந்த பாலு (எ) பாலசுப்ரமணியன் (35) ஆகியோரின் தொடர் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி., பாஸ்கரன் பரிந்துரைத்தார்.
இதனடிப்படையில் கலெக்டர் விசாகன் உத்தரவில் ஜோதி உள்பட 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வேடசந்தூர் போலீஸார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.