கிணற்றில் பாய்ந்த கார்; பறிபோன கல்லூரி மாணவர்களின் உயிர்: வீடு திரும்பியபோது சோகம்

கிணற்றில் பாய்ந்த கார்; பறிபோன கல்லூரி மாணவர்களின் உயிர்: வீடு திரும்பியபோது சோகம்

ஓணம் பண்டிகையை கொண்டாடி விட்டு வீடு திரும்பியபோது சாலையோர விவசாய கிணற்றில் கார் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

கோவை வடவள்ளியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ரோஷன், ஆதர்ஸ், நந்தனன், ரவி கிருஷ்ணன் ஆகியோர் தொண்டாமுத்தூர் சிறுவாணி சாலையில் உள்ள தனியார் விடுதியில் ஓணம் பண்டிகை கொண்டாட நேற்று இரவு சென்று உள்ளனர். பின்னர் ஓணம் கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு காலை 5.30 மணிக்கு வடவள்ளி நோக்கி மாணவர்கள் காரில் வந்துள்ளனர்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் தென்னமநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே உள்ள சாலையோரத்தில் இருந்த கிணற்றில் பாய்ந்தது. இதில், காரை ஓட்டி வந்த ரோஷன் மட்டும் காரில் இருந்து குதித்து தப்பினார். மற்ற மூன்று பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் காவலர்கள் கிணற்றில் மூழ்கி இறந்துகிடந்த மூன்று மாணவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓணம் பண்டிகையை கொண்டாடிவிட்டு வீடு திரும்பியபோது மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in