வீட்டு வாசலில் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி: காதலன் கைது

வீட்டு வாசலில் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி: காதலன் கைது

கேரளாவில் கல்லூரி மாணவி இன்று அதிகாலையில் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள வர்கலாவில் உள்ள வடசேரிகோணத்தைச் சேர்ந்தவர் கோபு(20). இவர் வடசேரிகோணம் சங்கீத நிவாஸில் வசிக்கும் 17 வயது சிறுமியான கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியைக் காதலித்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டின் வாசலில் அந்த கல்லூரி மாணவி கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். சம்பவம் அறிந்த போலீஸார் விரைந்து சென்று மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக மாணவியின் பெற்றோரிடம் விசாரித்த போது கோபுவை மாணவி காதலித்து வந்தது தெரிய வந்தது. இன்று அதிகாலை மாணவி வீட்டிற்கு வந்த கோபு, அவரை வெளியே அழைத்து கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து கோபுவை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், கடந்த சில காதலர்கள் உறவில் விரிசல் விழுந்ததன் காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. ஆயினும் எதற்காக மாணவி கொல்லப்பட்டார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in