கல்லூரி மாணவனை கொன்று தண்டவாளத்தில் வீசிச் சென்ற கும்பல்; 3 பேர் சிக்கினர்: 3 பேருக்கு வலை

கொலை
கொலை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவத்தில் மூன்றுபேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கூரியூரை சேர்ந்தவர் உஷ்மான். இவரது மகன் செய்யதுகான்(20), இவர் ராமநாதபுரம்-தேவிப்பட்டிணம் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாமாண்டு படித்துவந்தார். அவர் அதேபகுதியில் இருக்கும் பெட்ரோல் பங்கிலும் பகுதிநேரமாக வேலை செய்து வந்தார். தேவேந்திர நகர் கல்யாண மண்டபம் ஒன்றின் பின்னால் இருக்கும் தண்டவாளத்தில் நேற்று சடமாகக் கிடந்தார் செய்யதுகான். ராமநாதபுரம் ரயில்வே போலீஸார் உடலைக் கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பிரேத பரிசோதனை முடிவில் அவரது தலையில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல் விற்பனை நிலையத்தின் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. செய்யதுகான் வேலை செய்த பெட்ரோல் பங்கில் ரத்தக் காயங்கள் இருந்ததோடு, உணவுப்பொருள்களும் சிதறிக் கிடந்தன. இதனால் பெட்ரோல் பங்கில் தகராறு நடந்திருப்பது உறுதியானது.

போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் மல்லிகை நகரைச் சேர்ந்த வெங்கடேஷ்(25), கூரியூர் பகுதியைச் சேர்ந்த மணி பாரதி(24), களரி அலெக்ஸ் பாண்டியன்(23) உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூவரைத் தேடி வருகின்றனர். எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in