பேருந்தில் மித மிஞ்சிய கூட்டம்: படிக்கட்டில் பயணித்த கல்லூரி மாணவன் தவறி விழுந்து பலியான சோகம்

பேருந்தில் மித மிஞ்சிய கூட்டம்: படிக்கட்டில் பயணித்த கல்லூரி மாணவன் தவறி விழுந்து பலியான சோகம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புகோட்டை அருகில் உள்ள வெள்ளையாபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மகன் மாதேஸ்வரன்(19). இவர் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். இவர் விருதுநகரில் இருக்கும் கல்லூரிக்கு தினமும் அரசுப்பேருந்தில் செல்வது வழக்கம்.

இன்று காலையில் அருப்புக்கோட்டையில் இருந்து பேருந்து ஏறும்போதே மித மிஞ்சிய கூட்டம் இருந்தது. இதனால் பேருந்தின் உள்ளே செல்ல முடியாமல் படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்தார் மாதேஸ்வரன். கல்லூரிக்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டும் என்பதால் அந்தப் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்தார் மாதேஸ்வரன். பாலவநத்தம் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மாதேஸ்வரன் தவறிவிழுந்தார். இதில் பின் தலையில் பலத்த காயம்பட்டவர் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பலியானார். இச்சம்பவம் அப்பகுதிவாசிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. பள்ளி, கல்லூரி நேரங்களில் அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என இப்பகுதிவாசிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் செவிசாய்க்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.

ஏற்கெனவே அரசு மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்தால் ஓட்டுநர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தது. ஆனால் பள்ளி, கல்லூரி நேரங்களில் அப்படியான பயணங்கள் தவிர்க்க முடியாததாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in