நிலைத்தடுமாறிய பைக்; தூக்கிவீசப்பட்ட வாலிபர்கள்: பறிபோன கல்லூரி மாணவரின் உயிர்

நிலைத்தடுமாறிய பைக்; தூக்கிவீசப்பட்ட வாலிபர்கள்: பறிபோன கல்லூரி மாணவரின் உயிர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், ஆனப்பான்குழியைச் சேர்ந்தவர் ஜூடி. இவரது மகன் ஜெபின்(19). இவர் வெள்ளமோடி பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்தார். ஜெபின் வழக்கம்போல் நேற்றுமாலை கல்லூரி முடிந்து பைக்கில் வந்து கொண்டிருந்தார். அவரது பின்னால் கோடிமுனை என்னும் பகுதியைச் சேர்ந்த ஜெனிஸ்டன் என்பவர் இருந்தார். இவரது பைக் குளச்சல் பகுதியில் சென்றபோது நிலைத்தடுமாறி எதிரே வந்த குமார்(57) என்பவர் ஓட்டிவந்த பைக் மீது மோதியது.

இதில் புத்தளம் சேதுபதியூர் பகுதியைச் சேர்ந்த குமார், அவர் பின்னால் இருந்த சரவணன், கல்லூரி மாணவர்கள் ஜெபின், ஜெனிஸ்டன் ஆகிய நான்குபேருமே தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த நான்குபேரையும் அப்பகுதியினர் மீட்டு உடையார் விளை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவர் ஜெபின் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து குளச்சல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in