விரைந்து சென்ற திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்: பாய்ந்து தற்கொலை செய்த கல்லூரி மாணவி

விரைந்து சென்ற  திருச்செந்தூர்  எக்ஸ்பிரஸ் ரயில்: பாய்ந்து தற்கொலை செய்த கல்லூரி மாணவி

சிதம்பரம் அருகே   கல்லூரி மாணவி ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி. இவரது மகள் கிருத்திகா (19) கடலூர் கிருஷ்ணசாமி கல்லூரியில் பி. காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றவர் கல்லூரி முடிந்து மாலையில் சிதம்பரம் திரும்பி தனியார் கணினி பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்துவிட்டு இரவு தனது வல்லம்படுகையில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். 

இரவு 8.40  மணியளவில் சென்னையிலிருந்து திருச்செந்தூர் சென்று கொண்டிருந்த திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்  அந்த நேரத்தில் வல்லம்படுகை ரயில் நிலையம் வழியாக  வந்து கொண்டிருந்தது.  வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்த கிருத்திகா திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை ரயில்வே போலீஸார்  ரயிலில் அடிபட்டு இறந்த கிருத்திகாவின்  பிரேதத்தை கைப்பற்றி, பிணக்கூறாய்வு செய்வதற்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள அண்ணாமலை நகர் போலீஸார்  மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in