காதலை ஏற்க மறுத்த இளம்பெண்: ஒருதலை காதலால் உயிரை மாய்த்த கல்லூரி பேராசிரியர்

காதலை ஏற்க மறுத்த இளம்பெண்: ஒருதலை காதலால் உயிரை மாய்த்த கல்லூரி பேராசிரியர்

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் தனியார் கல்லூரிப் பேராசிரியர் தற்கொலை செய்துகொண்டார். இவர் ஒரு பெண்ணை ஒருதலையாகக் காதலித்து அது கைகூடாத விரக்தியில் தற்கொலை செய்திருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

செங்கோட்டையை அடுத்த விஸ்வநாதபுரம், இ.கே.தேவர் தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மகன் செல்லத்துரை(28). இவர் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் உதவிப்பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவர் ஒரு பெண்ணை ஒருதலையாகக் காதலித்துள்ளார். ஆனால் அந்தப் பெண் இவர் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து முயற்சித்தும் அந்தப் பெண் செல்லத்துரையை சட்டை செய்யவில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் ஏற்கெனவே மூன்றுமுறை தற்கொலைக்கு முயற்சித்து அதிர்ஷ்டவசமாகப் பிழைத்துள்ளார் செல்லத்துரை. இதனால் ஏகப்பட்ட உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்பட்டு கடந்த சில வாரங்களாகவே கல்லூரிப் பணிக்கும் செல்லவில்லை.

இந்நிலையில் நேற்று இரவு குடும்பத்தினர் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்றிருந்தனர். அப்போது வீட்டில் யாரும் இல்லாததைப் பயன்படுத்தி தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார் பேராசிரியர் செல்லத்துரை. இருந்தும், இவரது தற்கொலைக்கு ஒருதலைக்காதல் மட்டும்தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என செங்கோட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in