மாணவர்கள் கோரிக்கை உடனடி நிறைவேற்றம்... ரஜினி படப்பாடலுக்கு நடனமாடிய கலெக்டர்: வைரலாகும் வீடியோ

மாணவர்கள் கோரிக்கை உடனடி நிறைவேற்றம்... ரஜினி படப்பாடலுக்கு நடனமாடிய கலெக்டர்:  வைரலாகும் வீடியோ

மருத்துவக்கல்லூரி ஆண்டு விழாவில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பரதநாட்டியம் ஆடி ஆட்சியர் அசத்தியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பங்கேற்றார். அவரைக் கண்டதும உற்சாகம் பொங்க மாணவ, மாணவியர் நடனமாட வேண்டுகோள் விடுத்தனர். கவிதா ராமு முறைப்படி பரதநாட்டியம் கற்றவர் என்றதால் மாணவர்கள் இந்த கோரிக்கையை முன் வைத்தனர்.

இதனை ஏற்று ரஜினிகாந்த் நடித்த தளபதி படத்தில் இருந்து யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே என்ற பாடலுக்கு ஆட்சியர் கவிதா ராமு பரதநாட்டியம் ஆடினார்.இதைக்கண்டு மாணவ, மாணவியர் உற்சாகக் குரல் எழுப்பினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in