சேற்றில் சிக்கி சரிந்த குமரி ஆட்சியர் கார்; வைரலாகும் புகைப்படம்: எங்கள் நிலை தெரிகிறதா? என நெட்டிசன்கள் காட்டம்

சேற்றில் சிக்கி சரிந்த குமரி ஆட்சியர் கார்; வைரலாகும் புகைப்படம்: எங்கள் நிலை தெரிகிறதா? என நெட்டிசன்கள் காட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆய்வுக்கு சென்ற போது கார் சேற்றில் சிக்கி நிலைகுலைந்து சரிந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதில் என்ன நடந்தது என்னும் தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல கிராமச் சாலைகளும் குண்டு, குழிகளாக மிக மோசமாகக் காட்சியளிக்கிறது. இதைச் சீரமைக்க வேண்டும் என நீண்டகாலமாகவே கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் கார் ஒரு சேறான சாலையில் சிக்கி, நகர முடியாமல் கயிறு மூலம் ஒரு டெம்போவில் வைத்து இழுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இதுகுறித்து ஆட்சியர் அலுவலகத்தில் பணி செய்யும் ஊழியர்கள் கூறுகையில். “கன்னியாகுமரி மாவட்டத்தின் கடுக்கரை பகுதியில் ஆய்வுக்காக ஆட்சியர் சென்றிருந்தார். அது மலை பாங்கான சாலை. கூடவே அது அடிக்கடி மழை பெய்யும் பகுதி. அதனால் அந்தச் சாலை எளிதில் பாழடைந்துவிடும். அந்த சாலை வழியாக கடுக்கரைக்கு ஆய்வுக்கு சென்றபோது கார் சகதி, குண்டு, குழியில் சிக்கிக் கொண்டது. உடனே ஆட்சியர் அரவிந்த் வேறுகாரில் ஏறி ஆய்வுக்குச் சென்றுவிட்டார். அந்த சாலை வழியாகச் சென்ற யாரோ இதை புகைப்படமாக எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு விட்டனர்” என்றார். இதனிடையே, ஆட்சியருக்கு இப்போது எங்கள் நிலை தெரிகிறதா? என குமரிமாவட்ட நெட்டிசன்கள் பலரும் இதை தங்கள் முகநூலில் பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in