கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூல் செய்வது தண்டனைக்குரிய குற்றம்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூல் செய்வது தண்டனைக்குரிய குற்றம்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் அறக்கட்டளை மூலமாக நன்கொடை வசூலித்தற்கு வருமான வரி செலுத்த வேண்டும் என வருமான வரி மதிப்பீட்டுத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், “கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம். நன்கொடை வசூலிக்கக் கூடாது என்ற விழிப்புணர்வை மாநில அரசு மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். நன்கொடை வசூலிப்பதைத் தடுப்பதற்கான சட்டங்கள் மாநில அரசிடம் இல்லை. மத்திய, மாநில அரசுகள் கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூல் செய்யும் விவரங்களைத் தெரிவிப்பதற்காக ஒரு இணையதளத்தை உருவாக்க வேண்டும் ” என உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in