கோவை டூ பழநிக்கு ஒரே டூவீலரில் மூன்று பேர் பயணம்: வேன் மோதி ஒருவர் பலி

கோவை டூ பழநிக்கு ஒரே டூவீலரில் மூன்று பேர் பயணம்: வேன் மோதி ஒருவர் பலி

பழநி அருகே ஐயப்ப பக்தர்கள்‌ சென்ற வேன் மீது இரு சக்கர வாகனம் மோதி கோவை வாலிபர் பலியானார். 

கோவையைச் சேர்ந்தவர்கள் அஜித், சித்தார்த், சந்திரமூர்த்தி. நண்பர்களான இவர்கள், திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே சத்திரப்பட்டியைச் சேர்ந்த தனது நண்பர் ஒருவரை பார்க்க ஒரு இரு சக்கர வாகனத்தில் மூன்று பேரும் இன்று வந்தனர்.

பழநி சத்திரப்பட்டி அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த ஒரு கார் ஒன்று திடீரென திரும்பியது. காரில் மோதாமல் இருக்க, இரு சக்கர வாகனம் திரும்பியபோது, எதிரே வந்த ஐயப்ப பக்தர்கள் வேன் மீது மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த சித்தார்த் (25) சம்பவ இடத்திலேயே பலியானார். அங்கு வந்த சத்திரப்பட்டி போலீஸார், படுகாயமடைந்த அஜித், சந்திரமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக, பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து செம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in