அரசுத் தேர்வில் ஆள்மாறாட்டம்: ஹரியாணா வாலிபர்களை அமுக்கியது போலீஸ்

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்அரசுத் தேர்வில் ஆள்மாறாட்டம்: ஹரியாணா வாலிபர்களை அமுக்கியது போலீஸ்

மத்திய அரசு  நிறுவனத்தில் பணிக்கு  ஆட்கள் தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட  தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக ஹரியாணா மாநில வாலிபர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மர பெருக்கு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்காக ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். 

இந்த பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் 4-ம் தேதி கோவையில் நடந்தது. அப்போது தேர்வு எழுத வந்தவர்களின் போட்டோ, கைரேகை ஆகியவை பதிவு செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்றது. அப்போது தேர்வு எழுதிய 4 பேரின் போட்டோ, கைரேகை ஆகியவை மாறுபட்டிருந்தது. இது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த 4 பேரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து ஆங்கிலத்தில் எழுதுமாறும், பேசுமாறும் கூறினர். ஆனால், அவர்களால் பேசவும், எழுதவும் முடியவில்லை. ஆனால் தேர்வில் இவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். இதனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர் அரசுத் தேர்வில் ஆள்மாறாட்டம்: ஹரியாணா வாலிபர்களை அமுக்கியது போலீஸ்

விசாரணையில்  அவர்கள் 4 பேரும் ஆள் மாறாட்டம் செய்து தங்களது பெயரில் வேறொருவரை வைத்து தேர்வு எழுதியது தெரியவந்தது. மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குனர் குனிக்கண்ணன் இதுகுறித்து சாயிபாபா காலனி போலீஸில் புகார் அளித்தார். இதன் பேரில்,  மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதி ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த அமித் குமார் (30), இன்னொரு அமித்குமார் (26), அமித் (23), சுலைமான் (25) ஆகிய   4 பேரையும் கைது செய்துள்ள போலீஸார் அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த மோசடிக்கு இன்னொரு நபர் உதவி செய்திருப்பதாகவும்,  தேர்வு எப்படி எழுத வேண்டும், நேர்முக தேர்வு எப்படி நடக்கும் என 4 பேருக்கும் பயிற்சி அளித்து அனுப்பி வைத்துள்ளதாகவும் கண்டறிந்துள்ள போலீஸார்  அவரைத் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in