'பிஎஸ்சி படித்துள்ளேன்; பெண்ணும், வேலையும் கிடைக்கவில்லை'- டிரைவரை கொன்ற வாலிபர் அதிர்ச்சி வாக்குமூலம்

எரித்துக்கொல்லப்பட்ட லோடு ஆட்டோ டிரைவர் ரவி
எரித்துக்கொல்லப்பட்ட லோடு ஆட்டோ டிரைவர் ரவி

வேலையும், பெண்ணும் கிடைக்காத விரக்தியில் ஆட்டோ டிரைவர் எரித்துக்கொன்றதாக கைதான பிஎஸ்சி பட்டதாரி வாலிபர் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவை வீரியம்பாளையத்தை சேர்ந்தவர் ரவி (50). லோடு ஆட்டோ டிரைவர். இவர் நேற்று லோடு ஆட்டோவில் அமர்ந்து மணிகண்டன் என்பவரிடம் பேசிக்கொண்டு இருந்தாா். அப்போது அங்கு வந்த ஆசாமி ஒருவர் பெட்ரோலை ரவி மீது ஊற்றிவிட்டு தீ வைத்தார். இதில் ரவி படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்ததும் அங்கு இருந்தவர்கள் ஓடி வந்து ரவியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பீளமேடு போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் ரவி மீது பெட்ரோலை ஊற்றி எரித்தது நேருநகரை சோ்ந்த கூலித்தொழிலாளி பூபாலன் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து, பூபாலனை போலீஸார் கைது செய்தனர்.

போலீஸாரிடம் பூபாலன் அளித்த வாக்குமூலத்தில், "பி.எஸ்சி இயற்பியல் பட்டதாரியான நான் வேலையில்லாமல் பல ஆண்டுகளாக தவித்து வருகிறேன். இதனால் கிடைக்கும் கூலி வேலைகளை செய்து வாழ்ந்து வருகிறேன். திருமணம் ஆகவில்லை. யாரும் பெண் தரவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி எப்போதும் போதையில் இருப்பேன். அந்த போதையில் லோடு ஆட்டோ டிரைவரை எரித்து கொன்றேன்" என்றார். இந்த தகவலை போலீஸார் தெரிவித்தனர். கொலையாளியின் வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in