சிவில் சர்வீஸ் தேர்வில் அசத்திய கோவை மாவட்ட பெண் அதிகாரி!

சத்ய பார்வதி
சத்ய பார்வதி சிவில் சர்வீஸ் தேர்வில் அசத்திய கோவை மாவட்ட பெண் அதிகாரி!

மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரியாக  பணிபுரியும் இளம்பெண், தற்போது நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார். 

கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரியாக  சத்ய பார்வதி (27) பணிபுரிந்து வருகிறார். இவர்  சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று தேசிய அளவில் 518-வது இடம் பிடித்துள்ளார். இவர் தனது 4-வது முயற்சியில் இந்த வெற்றியை பெற்றுள்ளார்.

இதுகுறித்து சத்ய பார்வதி கூறுகையில், எனது சொந்த ஊர் தூத்துக்குடி.  கடந்த 2019-ம் ஆண்டு குரூப்-1 தேர்வு எழுதி வெற்றி பெற்று தற்போது கோவையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலராக பணிபுரிகிறேன். எனது தந்தை ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. எனது 4-வது முயற்சியில் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. 

கடந்த முறை தேர்வில் வெற்றி பெற்று நேர்காணல் முடிந்த பின்னர் மதிப்பெண்ணில் எனது வெற்றி பறிபோனது.

இதையடுத்து தீவிரமாக படித்து வந்தேன். சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத நினைப்பவர்கள் அரசு அளிக்கும் இலவச பயிற்சியைப் பயன்படுத்தி கொள்ளலாம். சமச்சீர் புத்தகங்கள், கடந்த கால கேள்விகளைப் படித்து வந்தாலே இந்த தேர்வில் வெற்றி பெற முடியும். முதல் முறையே வெற்றி பெறாவிட்டாலும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் வெற்றி கிடைக்கும் ’’ என்றார்.

அரசுத் துறையில் அதிகாரியாக பணிபுரிந்தாலும் கூட அதோடு திருப்தி அடைந்து விடாமல்  சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை குறி வைத்து உழைத்து, அதில் வெற்றியும் பெற்றுள்ள இளம்பெண் அதிகாரியின் இந்த சாதனை  அனைவருக்கும் முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in