கோவை சம்பவத்தில் அதிர்ச்சியளிக்கும் 100 வீடியோ ஆதாரங்கள்: கண்காணிப்பு வளையத்தில் 30 பேர்!

கோவை சம்பவத்தில் அதிர்ச்சியளிக்கும் 100 வீடியோ ஆதாரங்கள்: கண்காணிப்பு வளையத்தில் 30 பேர்!

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 30 பேர் கண்காணிப்பு வளையத்தில் வைத்துள்ளதாகவும், 3 முதல் 4 பேரைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் கடந்த அக். 23-ம் தேதி அதிகாலையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை சம்பவத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் தேசியப் பாதுகாப்பு முகமையின் விசாரணை(என்ஐஏ) வளையத்திற்குள் உள்ள நபர்கள் ஆகியோர்  தொடர்புடைய இடங்களில், தமிழக காவல்துறையினர் முன்கூட்டியே விசாரணை நடத்துவதுடன், அந்த இடங்களில் திடீர் சோதனையும் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை எஸ்.பி. பத்ரி நாராயணன், “கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆதாரங்கள், பென் டிரைவ்-ல் ஐஎஸ் அமைப்பு தொடர்பான வீடியோ காட்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவாகி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக 30 பேர் கண்காணிப்பு வளையத்தில் இருக்கிறார்கள். 3 முதல் 4 பேரைத் தீவிரமாகக் கண்காணித்துவருகிறோம்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in