‘கோப்ரா’ படத்தில் குறைக்கப்பட்டது 20 நிமிடக் காட்சிகள் - என்ன காரணம் தெரியுமா?

‘கோப்ரா’ படத்தில் குறைக்கப்பட்டது 20 நிமிடக் காட்சிகள் - என்ன காரணம் தெரியுமா?

விக்ரம் நடிப்பில் நேற்று வெளியான ‘கோப்ரா’ திரைப்படத்தின் காட்சிகளின் நீளத்தை படக்குழு குறைத்துள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தின் நீளம் 3 மணி நேரம் 3 நிமிடம் 3 நொடிகள் ஆகும். இதனால் படம் மிகவும் நீளமாக இருப்பதாக ரசிகர்கள் நேற்று முதல் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக ‘கோப்ரா’ படத்தின் நீளத்தை 20 நிமிடங்கள் குறைத்துள்ளது படக்குழு. இது தொடர்பான அறிவிப்பை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், “ ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதே நல்ல சினிமா அனுபவமாக இருக்கும். ரசிகர்களின் பணம் மற்றும் நேரத்தை பயனுள்ளதாக்க மாற்றுவதே அவர்களுக்கான மகிழ்ச்சியாக இருக்கும். எனவே திரைப்படம் பார்த்தவர்கள், ரசிகர்கள், ஊடக நண்பர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் விமர்சகர்களின் பரிந்துரைத்தபடி ‘கோப்ரா’ படத்தின் நீளம் இப்போது 20 நிமிடங்களுக்கு டிரிம் செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை முதல் அனைத்து திரைகளிலும் இந்த காட்சிக் குறைப்புகள் அப்டேட் செய்யப்படும். படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள்” என தெரிவித்துள்ளனர்.

விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, இர்ஃபான் பதான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தமிழகத்தில் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in