முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு: பிரதமர் மோடி இரங்கல்

முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு: பிரதமர் மோடி இரங்கல்

செங்கல்பட்டு அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறித்துள்ளார். பிரதமர் மோடி, எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு பகுதியில் லாரி மீது மோதிய கோர விபத்தில் பஸ் பயணித்த 2 பெண்கள் உட்பட 6 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்து உள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு 1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் நிதியுதவியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "செங்கல்பட்டு அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை அறிந்து வருந்துகிறேன். உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "செங்கல்பட்டு மாவட்டம்,

அச்சரப்பாக்கம் அருகே அரசு பேருந்தும்,லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 6பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும் சிகிச்சை பெறுவோர் பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்பவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்வதுடன், இவ்விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிகபட்ச நிவாரண நிதி வழங்கிட வேண்டும் என்றும் இந்த அரசை வலியுறுத்துகிறேன். வாகன ஓட்டிகள் தங்களுடைய, தங்கள் குடும்பத்துடைய எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு கண்ணும் கருத்துமாக எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்கி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டி கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in