காலராவை கட்டுப்படுத்த நடவடிக்கை: கர்நாடகாவில் குடிநீரை பரிசோதிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல்வர் உத்தரவு!

கர்நாடகா முதல்வர் சித்தராமையா
கர்நாடகா முதல்வர் சித்தராமையா
Updated on
1 min read

கர்நாடகாவில் நீரால் பரவும் நோய்கள் மற்றும் காலரா பரவுவதை கட்டுப்படுத்த தினமும் குடிநீர் பரிசோதனை நடத்துமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவின் சொந்த மாவட்டமான மைசூரில் சுகாதாரமற்ற தண்ணீரை பருகிய ஒருவர் உயிரிழந்தார். மேலும், முதல்வரின் வருணா தொகுதி மற்றும் அம்மாவட்டத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி பிரிவில் உள்ள இரண்டு கிராமங்களில் காலரா நோய் பரவியுள்ளது. இந்நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கையாக மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க முதல்வர் சித்தராமையா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

குடிநீர்
குடிநீர்

கிருஷ்ணாவில் உள்ள அலுவலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் துணை ஆணையர்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்திய முதல்வர் சித்தராமையா, மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவது மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பு என அறிவுறுத்தினார்.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பேசுகையில், "இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, துணை ஆணையர்கள் தினமும் குடிநீரை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள மக்களின் பயன்பாட்டுக்கு வழங்குவதற்கு முன், ஒவ்வொரு நாளும் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். இதை மாவட்ட நிர்வாகங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

குடிநீர் பரிசோதனை
குடிநீர் பரிசோதனை

தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகங்களும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும். மாநிலத்தில் எங்கிருந்தும் இதுபோன்ற புதிய பாதிப்புகள் ஏதேனும் பதிவானால் அவர்கள் உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுவார்கள். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தாசில்தார்களிடம் ரூ.826 கோடி உள்ளது. கால்நடைகளுக்கு குடிநீர் மற்றும் தீவனம் வழங்குவதில் எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது. தேவைப்பட்டால், கிராமங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக புதிய ஆழ்துளை கிணறுகளையும் ஏற்படுத்தலாம்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in