வறுமையில் வாடும் அரியலூர் ஹாக்கி வீரர்: அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல்வர் உறுதி!

வறுமையில் வாடும் அரியலூர் ஹாக்கி வீரர்: அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல்வர் உறுதி!

அரியலூர் ஹாக்கி வீரர் கார்த்திக்குக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தமிழக அரசு முன்வந்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் ஹாக்கி வீரர் கார்த்திக். இவர் கடந்த மே  மாதம்  இந்திய ஹாக்கி அணிக்குத் தேர்வாகி இருந்தார்.  இவரின் தந்தை செல்வம் அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். மேலும் தாய் வளர்மதி வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வறுமையை பொருட்படுத்தாமல் மகன் கார்த்திக்கைப் படிக்க வைத்தனர். அதே வேளையில் கார்த்திக் விளையாட்டில் சாதிப்பதற்கும் அவர்கள் பக்கபலமாக இருந்து வந்தனர்.  பெங்களூருவில் ஹாக்கி பயிற்சி மேற்கொண்டு வந்த கார்த்திக், கடந்த  மே மாதம் இந்திய ஹாக்கி அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவரது குடும்பம் தொடர்ந்து வறுமையில் சிக்கித் தவித்தது. இந்நிலையில் உதவி கேட்டு அவரது பெற்றோர்கள் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

கார்த்திக் குறித்த செய்திகள் மீடியாக்களில் வெளியானதைத் தொடர்ந்து, தமிழக அரசு அவருக்கு உதவ முன்வந்துள்ளது.  அரியலூர் சென்ற போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்,  கார்த்திக்கின் பெற்றோரைச் சந்தித்து  தமிழக அரசு சார்பில் 10 லட்சம் நிதியுதவி வரும் 24-ம் தேதி முதல்வர் ஸ்டாலினால் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  மேலும்,  விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து கொடுக்கும் எனவும் உறுதியளித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in