14 லட்சம் பொருட்களை அள்ளிக்கொண்டு அரிசி ஆலைக்கு பூட்டு போட்ட கும்பல்

14 லட்சம் பொருட்களை அள்ளிக்கொண்டு அரிசி ஆலைக்கு பூட்டு போட்ட கும்பல்

சிவகாசி அருகே கடந்த 3 ஆண்டுகளாக மூடிக்கிடந்த அரிசி ஆலையில் ரூ.14 லட்சம் பொருட்களை மர்மக்கும்பல் அள்ளிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சிவானந்தம் நகரைச் சேர்ந்தவர் காசிராஜன். இவரது மகன் சிவக்குமார். இவர் சிவகாசி அருகே அச்சம்தவிர்த்தான் பகுதியில் தனது மனைவி பெயரில் அரிசி ஆலை நடத்தி வந்தார்.

தொழில் நலிவடைந்ததால், கடந்த 3 ஆண்டுகளாக இந்த ஆலை மூடிக்கிடந்தது. வாரத்திற்கு ஒரு முறை ஆலையை சிவக்குமார் பார்த்து சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 12-ம் தேதி ஆலையைப் பார்க்க வந்தார். அப்போது, பின்புற கதவு புதிய பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்தது.

அப்போது உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த கம்பரஸர், ஜெனரேட்டர், தேக்கு மரநிலைக்கதவு, டைனிங் டேபிள், வர்த்தக சிலிண்டர், பேட்டரி, எடை இயந்திரம், அலுமினிய பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.14.21லட்சமாகும்.

இதுகுறித்து சிவக்குமார் அளித்த புகாரின் பேரில்,வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடந்தது திருட்டா அல்லது பொருட்களை யாரேனும் அள்ளிக்கொண்டு புதிய பூட்டால் ஆலையைப் பூட்டிச்சென்றார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in