திருநெல்வேலியில் 8-ம் வகுப்பு மாணவன் உயிரைப் பறித்த செல்போன் மோகம்

தற்கொலை
தற்கொலைதிருநெல்வேலியில் 8-ம் வகுப்பு மாணவன் உயிரைப் பறித்த செல்போன் மோகம்

திருநெல்வேலியில் 8-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. செல்போன் மோகத்தால் சிறுவன் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட தைக்கா தெரு பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல்ராஜ். இவரது மனைவி மேரி. மைக்கேல்ராஜ் உடல் நலமின்மையால் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இந்நிலையில், மேரி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சென்று தன் இருபிள்ளைகளையும் படிக்க வைத்திருந்தார். இந்தத் தம்பதியின் மூத்த மகள் பத்தாம் வகுப்பும், இளைய மகன் தருண் அதேபகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பும் படித்துவந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் மற்றொரு அறையில் மாணவன் தருண் திடீரென தூக்குப் போட்டுக் கொண்டார். இதைப் பார்தது மேரி அலறினார். அக்கம், பக்கத்தினர் உதவியோடு தருணை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த போது ஏற்கெனவே தருண் இறந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்துத் திருநெல்வேலி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தருணுக்கும், அவரது சகோதரிக்கும் இடையே செல்போன் பயன்படுத்துவதில் நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த அதிருப்தியில் தருண் தற்கொலை செய்து இருக்கலாம் என்னும் கோணத்தில் போலீஸார் விசாரணை செய்கின்றனர். செல்போன் மோகத்தில் 8-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in