தெருவில் விளையாடிய‌ தம்பி; வீட்டிற்குள் தற்கொலை செய்த அண்ணன்: வேலை முடிந்து வந்த பெற்றோர் கதறல்

 தற்கொலை
தற்கொலை தெருவில் விளையாடிய‌ தம்பி; வீட்டிற்குள் தற்கொலை செய்த அண்ணன்: வேலை முடிந்து வந்த பெற்றோர் கதறல்

நாகர்கோவிலில் எவ்வித பிரச்சினையும் இல்லாத சூழலில் திடீரென ஏழாம் வகுப்பு மாணவன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

நாகர்கோவில் மேலராமன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன். வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி நாகர்கோவிலில் துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்தத் தம்பதியின் மூத்த மகன் ஸ்டெபின்(13) அதேபகுதியில் இருக்கும் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, எட்டாம் வகுப்பு செல்ல இருந்தார். கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்வதால் பிள்ளைகள் இருவரும் வீட்டில் தனியாக இருப்பார்கள்.

நேற்று இரவு 8 மணிக்கு ஸ்டீபனும், அவரது மனைவியும் வேலைமுடிந்து வீட்டுக்கு வரும்போது இளைய மகன் மட்டும் தெருவில் விளையாடிக் கொண்டு இருந்தான். மூத்தமகன் ஸ்டெபினைக் காணவில்லை. வீட்டில் வந்து பார்த்தபோது ஸ்டெபினின் அறை உள்பக்கமாக பூட்டி இருந்தது. வெகுநேரம் தட்டியும் திறக்காததால் ஸ்டீபன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே போய் பார்த்தார். அங்கு, ஸ்டெபின் பேனில், துப்பட்டாவில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து இருந்தார்.

ஸ்டெபின் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என அவரது குடும்பத்தினருக்கும் தெரியவில்லை. எவ்வித பிரச்சினையும் இல்லாமல் இயல்பாக இருந்த மாணவன் திடீரென தற்கொலை செய்தது ஏன்? என்பது குறித்து நேசமணிநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in