நண்பரின் பிறந்தநாளைக் கொண்டாடியபோது விபரீதம்: கடலில் மூழ்கி 12-ம் வகுப்பு மாணவன் மரணம்

சித்தரிக்கப்பட்ட படம்
சித்தரிக்கப்பட்ட படம்நண்பரின் பிறந்தநாளைக் கொண்டாடியபோது விபரீதம்: கடலில் மூழ்கி 12-ம் வகுப்பு மாணவன் மரணம்

தன் நண்பரின் பிறந்தநாளைக் கொண்டாட சக மாணவர்களுடன் கடலில் குளிக்கச் சென்ற பிளஸ் டூ மாணவன் கடலில் மூழ்கி உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், பூச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் திருமலை. இவரது மகன் மதன்(17) அதேப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பனிரெண்டாம் வகுப்பு படித்துவந்தார். இதேபள்ளியில் படித்து வரும் நவீன் என்னும் மாணவருக்கு நேற்று பிறந்தநாள். அதனால் நவீன், மதன், சுகன், செல்வன், கிஷோர் என ஐந்து நண்பர்கள் சேர்ந்து நேற்று மாலை பள்ளிக்கூடம் முடிந்ததும், உவரி கடலுக்குக் குளிக்கச் சென்றனர்.

நண்பர்கள் மகிழ்ச்சியாகக் குளித்துக் கொண்டு இருந்தபோதே திடீரென வந்த அலையில் மதன் மட்டும் இழுத்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்துவிட்டு சக நண்பர்கள் சத்தமாகக் கத்தினர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த மீனவர்கள் மதனை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மதன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து உவரி கடலோர காவல்படை சார்பு ஆய்வாளர் ஜான் கிங்ஸ்லி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குச் சென்று கடலில் மூழ்கி பிளஸ் டூ மாணவன் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in