செல்போன் தர மறுத்த பெற்றோர்: 11 -ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!

செல்போன் தர மறுத்த பெற்றோர்: 11 -ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!

தன் பெற்றோர் செல்போன் தராத கோபத்தில், 11-ம் வகுப்பு மாணவன் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் திருநெல்வேலியில் நடந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகில் உள்ள மருதம் நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஸ். வெளிநாட்டில் வேலை செய்துவரும் இவருக்கு மனைவி, மற்றும் 2 மகன்கள் இருந்தனர். இவரது இரண்டாவது மகன் சதீஸ்(16) பாளையாங்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்துவந்தார். இவர் இன்றுகாலை தன் பள்ளிக்கூடம் அருகில் இருக்கும் தண்டவாளத்தில், நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்ற கோவை எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதில் உடல் நசுங்கி சதீஸ் பலியானார்.

சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த ரயில்வே போலீஸார், மாணவன் சதீஸின் உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், மாணவன் சதீஸ் அண்மைக்காலமாக அதிக நேரத்தை செல்போனிலேயே செலவிட்டு வந்துள்ளார். இதனால் மாணவன் சதீஸின் பெற்றோர் அவனுக்கு செல்போன் தராமல் வேறு இடத்தில் ஒளித்துவைத்துள்ளனர். இதனால் மன வருத்தத்தில் சதீஸ் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in