10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு: அட்டவணை வெளியீடு

10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு: அட்டவணை வெளியீடு

10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

அதன்படி மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை 11-ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும். இந்த பொதுத் தேர்வை 8.50 லட்சம் மாணவ, மாணவிகள் 3,169 தேர்வு மையங்களில் எழுதுகின்றனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பொதுத் தேர்வை 10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.

12-ம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வை 8.80 லட்சம் பேர் எழுதுகின்றனர். வினாத்தாள்கள் முறையில் ஏற்கெனவே பின்பற்றப்படும் முறையே கடைப்பிடிக்கப்படுகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

10- வகுப்பு தேர்வு அட்டவணை

ஏப்ரல் 6-ம் தேதி- தமிழ்

ஏப்ரல் 10-ம் தேதி- ஆங்கிலம்

ஏப்ரல் 13-ம் தேதி - கணிதம்

ஏப்ரல் 16-ம் தேதி - விருப்ப மொழி பாடம்

ஏப்ரல் 17-ம் தேதி- அறிவியல்

ஏப்ரல் 20-ம் தேதி - சமூக அறிவியல்

12- வகுப்பு தேர்வு அட்டவணை

மார்ச் 13-ம் தேதி- மொழிப்பாடம்

மார்ச் 15-ம் தேதி - ஆங்கிலம்

மார்ச் 17-ம் தேதி - கணினி அறிவியல், உயிரி வேதியியல், புள்ளியியல், சிறப்பு தமிழ், தொடர்பு ஆங்கிலம்

மார்ச் 21-ம் தேதி- இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்

மார்ச் 27-ம் தேதி- கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல்

மார்ச் 31-ம் தேதி - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in