ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவன் பலி: சதுர்த்தி விடுமுறைக்கு வந்த போது நிகழ்ந்த சோகம்

ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவன் பலி: சதுர்த்தி விடுமுறைக்கு வந்த போது நிகழ்ந்த  சோகம்

கோவையில் படித்துவந்த 10-ம் வகுப்பு மாணவர் சொந்த ஊரான குமரி மாவட்டத்திற்கு விடுமுறைக்கு வந்தபோது ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் வட்டக்கோட்டையைச் சேர்ந்தவர் கண்ணன். டெம்போ ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி சித்ரா. இந்தத் தம்பதியினருக்கு திவாகர்(15) என்ற மகனும், ஒரு மகளும் இருந்தனர். திவாகர் கோயம்புத்தூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து 10-ம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு கண்ணன் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

திவாகர், தன் தாய் சித்ரா, சகோதரியுடன் அஞ்சுகிராமம் அருகில் உள்ள ரஸ்தாகாடு கடற்கரைக்கு நேற்று மாலை சென்றார். அங்கு அவர் கடலில் காலை நனைத்துக் கொண்டிருந்தபோது திடீரென எழுந்த ராட்சத அலையில் திவாகர் இழுத்துச் செல்லப்பட்டார். கடலோர காவல்படையினர் மாயமான மாணவன் திவாகரைத் தேடிவந்தனர். ஆனால் திவாகர் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலையில் திவாகர் அலை இழுத்துச் சென்ற இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் சடலமாக மீட்கப்பட்டார். விடுமுறைக்கு வந்த இடத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in