பள்ளி ஆசிரியரை துரத்தி துரத்தி துப்பாக்கியால் சுட்ட 10-ம் வகுப்பு மாணவன்: வைரலாகும் வீடியோ

பள்ளி ஆசிரியரை துரத்தி துரத்தி துப்பாக்கியால் சுட்ட 10-ம் வகுப்பு மாணவன்: வைரலாகும் வீடியோ

பள்யில் மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலைக் கண்டித்த ஆசிரியரை ஓட ஓட விரட்டி 10-ம் வகுப்பு மாணவர் ஒருவர் துப்பாக்கியால் மூன்று முறை சுட்ட சம்பவம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் உள்ள பள்ளியில் இரண்டு மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை ஒரு ஆசிரியர் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த 10-ம் வகுப்பு மாணவர் ஒருவர், நாட்டுத் துப்பாக்கியால் இன்று அந்த ஆசிரியரை சுட்டார். இதனால் பள்ளி வளாகத்தில் அவர் தப்பியோடினார். ஆனால், அந்த மாணவர் விடாமல் துரத்திச் சென்று மூன்று முறை ஆசிரியரை நோக்கிச் சுட்டுள்ளார். இதில் ஆசிரியர் படுகாயமடைந்தார்.

இந்த சம்பவத்தைப் பார்த்து ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மற்ற மாணவர்கள் துப்பாக்கி வைத்திருந்த மாணவனைப் பிடிக்க முயன்றனர். ஆனால், அந்த மாணவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியர் காயமடைந்தாலும் அவர் உயிருக்கு ஆபத்து இல்லை என்று கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜீவ் தீட்சித் தெரிவித்தார். ஆசிரியர் மேல் சிகிச்சைக்காக லக்னோவுக்கு அனுப்பப்பட்டுள்ளார். ஆசிரியரை மாணவர் துப்பாக்கியால் சுட்டக்காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in