உச்ச நீதிமன்றத்தின் மொபைல் செயலி 2.0: தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவிப்பு!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்கோப்புப் படம்

கூடுதல் அம்சங்களுடன் கூடிய உச்ச நீதிமன்ற மொபைல் ஆப் 2.0 தயாராக இருப்பதாகவும், அனைத்து சட்ட அதிகாரிகள் மற்றும் அரசுத் துறைகளும் தங்கள் வழக்குகளைக் கண்காணிக்க இது உதவும் என்றும் இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அறிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற மொபைல் செயலியின் புதிய பதிப்பின் மூலம், அரசு துறைகள் தங்களின் நிலுவையில் உள்ள வழக்குகளை இப்போது பார்க்கலாம் என்று தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் கூறினார். " செயலியில் இந்த நேரத்தில் நாங்கள் கூடுதல் அம்சத்தை வழங்கியுள்ளோம். இதன் மூலம் அனைத்து சட்ட அதிகாரிகளும் தங்கள் நிகழ்நேர அணுகலைப் பெறலாம். அனைத்து அரசுத் துறைகளும் தங்கள் வழக்குகளின் நிலுவைத் தன்மையை சரிபார்க்கலாம். எனவே இதைப் பயன்படுத்தவும்" என்று கூறினார்.

புதுப்பிக்கப்பட்ட செயலியின் சுருக்கம், மத்திய அமைச்சகத் துறையின் நோடல் அதிகாரிகள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நிலை உத்தரவுகள், தீர்ப்பு மற்றும் தாக்கல் செய்யப்பட்ட இதர ஆவணங்கள் போன்றவற்றை இந்த செயலியில் பார்க்கலாம்.

2021-ம் ஆண்டில், தொற்றுநோய்களின் போது நீதிமன்ற வளாகத்திற்குச் செல்லாமல் பத்திரிகையாளர்கள் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளை தெரிந்துகொள்வதற்காக மொபைல் செயலியை உச்ச நீதிமன்றம் அறிமுகப்படுத்தியது. தற்போது அதன் அடுத்த புதுப்பிக்கப்பட்ட வடிவம் அறிமுகமாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in