குடிமைப்பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு!

குடிமைப்பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு!

மத்திய தேர்வாணையம் நடத்தும் முதுநிலை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி அளிப்பதற்கான நுழைவுத் தேர்வு தமிழ்நாட்டில் உள்ள 17 மையங்களில் வரும் 13-ம் தேதி அன்று நடைபெற உள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தைச் சேர்ந்த இளநிலை பட்டதாரிகள், முதல்நிலை பட்டதாரிகளுக்கு தமிழக அரசின் சார்பில் சென்னையில் உள்ள அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்திலும் கோயம்புத்தூர், மதுரை மாவட்டங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி பயிற்சி மையங்களிலும் மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி முதுநிலை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

விண்ணப்பதாரர்களிடம் இருந்து இப்பயிற்சிக்கான நுழைவுத்தேர்வுக்கு இணையதள வழியாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு 7077 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 2023-ம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதி நடைபெற உள்ள மத்திய தேர்வாணையம் நடத்தும் முதுநிலை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி அளிப்பதற்கான நுழைவுத் தேர்வு தமிழ்நாட்டில் உள்ள 17 மையங்களில் வரும் 13-ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த ஆர்வலர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பயிற்சி மைய இணையதளத்தின் www.civilservicecoaching.com வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தேர்வில் 150 கொள்குறி வினாக்களுக்கு விடை அளிக்கப்பட வேண்டும். தேர்வு வரும் 13-ம் தேதி அன்று காலை 10.30 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தேர்வு மையங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. மேலும் அவ்வப்போது அறிவிக்கப்படும் விவரங்களை www.civilservicecoaching.com என்ற இணையதளத்திலும் தொலைபேசி எண் 044-24621475, 94442286657 ஆகிய எண்களையும் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in