வியாசர்பாடி பாலத்தில் பயணிகளுடன் மழை நீரில் சிக்கிய மாநகர பேருந்து: கயிறு கட்டி இழுத்த போலீஸார், பொது மக்கள்

வியாசர்பாடி பாலத்தில் பயணிகளுடன் மழை நீரில் சிக்கிய மாநகர பேருந்து: கயிறு கட்டி இழுத்த போலீஸார், பொது மக்கள்

சென்னை வியாசர்பாடி பாலத்தில் தேங்கிய மழைநீரில் பயணிகளுடன் மாநகர பேருந்து சிக்கி கொண்டது. காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு பேருந்தை கயிறு கட்டி மீட்டனர்.

சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு முக்கிய சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் சென்னை பிராட்வேயில் இருந்து பயணிகளுடன் மூலக்கடை நோக்கிச் சென்ற 64c என்ற மாநகரப் பேருந்து, சற்று முன் வியாசர்பாடி பகுதியில் உள்ள கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்ல முயன்றது போது, சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் பேருந்து செல்ல முடியாமல், உள்ளேயே சிக்கிக் கொண்டதால் பயணிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகினர்.

இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த போக்குவரத்து போலீஸார், மற்றொரு வாகனத்தின் உதவியுடன் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக்கொண்ட பேருந்தை கயிறு கட்டி இழுத்து வெளியே கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் இன்னலுக்குள்ளாகினர். வருடந்தோறும் மழைக் காலங்களில் கணேசபுரம் சுரங்கப் பாதையில் இதுபோன்ற மழைநீர் தேங்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றம்சாட்டிய பொதுமக்கள், இதுபோன்ற பிரச்சினைகளில் அரசு கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in