சிகரெட் பற்றவைத்தவர் உடல் கருகி பலி: நடந்தது என்ன?

சிகரெட் பற்றவைத்தவர் உடல் கருகி பலி: நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகாலையில் தூங்கி விழித்ததும் சிகரெட் பற்றவைத்த வாலிபர் உடல் கருகி உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட அவ்வை நகரைச் சேர்ந்தவர் யோகீஸ்வரன்(50). இவர் பீரோ தயாரிக்கும் பட்டறை ஒன்றில் வேலை செய்துவந்தார். யோகீஸ்வரனுக்குத் தீராத குடிபழக்கம் உண்டு. வழக்கம்போல் நேற்று இரவும் குடித்துவிட்டுத் தூங்கச் சென்றார் யோகீஸ்வரன். அவரது அறையில் மண்ணெண்ணைய் கேன் ஒன்று இருந்தது. இரவில் போதையில் புரண்டு படுத்த யோகீஸ்வரனின் கால்பட்டு மண்ணெண்ணைய் கேன் சரிந்து விழுந்தது. அதில் இருந்து இரவு முழுவதும் சொட்டு, சொட்டாக மண்ணெண்ணைய் சிந்தி இருந்தது.

யோகீஸ்வரன் போதையில் இருந்ததால் அது அவரது கவனத்திற்கும் வரவில்லை. இந்நிலையில் இன்று காலையில் தூங்கி முழித்ததும் யோகீஸ்வரன் சிகரெட்டைப் பற்றவைத்தார். அப்போது தீப்பொறி சிதறி இருந்த மண்ணெண்ணையில் விழவே அந்த அறையில் நெருப்புப் பற்றியது. இதில் உடல் கருகியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அதற்குள் யோகீஸ்வரன் உயிரிழந்துவிட்டார். இந்தக் கோரச் சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in