பேட்மிண்டன் தரவரிசை பட்டியல் வெளியீடு... இந்திய வீரர்கள் 2ம் இடம் பிடித்தனர்!

சிராக் ஷெட்டி - சாத்விக்சாய்ராஜ் பேட்மிண்டன்
சிராக் ஷெட்டி - சாத்விக்சாய்ராஜ் பேட்மிண்டன்

தென்கொரியாவில் நடைபெற்ற கொரியன் ஓபன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிராக் ஷெட்டி - சாத்விக்சாய்ராஜ் இணை தங்கம் வென்று சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்களின் இணை இரண்டாம் இடத்தை பிடித்தனர். கொரியன் தொடருக்கு முன்பாக ஸ்விஸ் ஓபன், இந்தோனேஷியன் ஓபன் உள்ளிட்ட தொடர்களிலும் பதக்கம் வென்று தொடர் வெற்றிகளை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பிவி சிந்து மகளிர் தரவரிசையில் 17வது இடத்தில் உள்ளார். ஆடவர் பிரிவில் ஹெச்.எஸ்.பிரணாய் 10வது இடத்திலும் லக்‌ஷயா சென் 13வது இடத்திலும் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in